ஹுனுபிட்டிய-வனவசல ரயில் தடம்புரண்ட விபத்தில்12 பயணிகள் காயம்

ஹுனுபிட்டிய-வனவசல ரயில் தடம்புரண்ட விபத்தில்12 பயணிகள் காயம்

இன்று காலை (16) வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான இரயில் பாதையில் இரயில் தடம்புரண்டு கவிழ்ந்ததில், பன்னிரண்டு பயணிகள் இலேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் கண்காணிப்பாளருமான எஃப். யூ. உட்லர் தெரிவித்தார்.

இன்று காலை 3:25ற்கு பொல்கஹவெலவிலிருந்து புறப்பட்ட குறித்த இரயில், களுத்துறை தெற்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான இரயில் பாதையில் இரயில் தடம்புரண்டது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )