
1.5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல பியன்வில பகுதியில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் வகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 1 கிலோகிராம் 568 கிராம் 100 மில்லிகிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பேலியகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

