தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல் தீவிரம்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல் தீவிரம்

இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கந்தூரி நகரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிந்த் ஜ்பெய்ல் மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தூரி மாவட்டத்தின் மீது இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், டயர் மாவட்டத்தில் உள்ள புர்ஜ் ரஹால் மற்றும் அப்பாசியே பகுதிகளுக்கு இடையிலான பகுதிகளில் மேலும் ஒரு வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், இஸ்ரேல் இராணுவத்தின் பீரங்கிப் படையினர் சித்திகின் நகரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )