
யாழ் மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி. அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை மாநகர ஆணையாளராக பணியாற்றிய எஸ். கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். சத்தியசீலன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதீபன்

