
பால் தேநீரின் விலை அதிகரிப்பு
ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

