
மலையக மக்களின் காணி உரிமைக்காக 7 வயது சிறுவனின் நடைபயணம்
மலையக மக்களின் காணி உரிமைகளை வலியுறுத்தி, 7 வயது சிறுவன் பிரேம் கார்கி இன்று தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி விசேட நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மலையக மக்களின் நில உரிமைகளை உறுதிப்படுத்துவதையும், அதனைச் சார்ந்த கோரிக்கைகளை அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை நகரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடைபயணம் சுமார் 140 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாகும்.
மேலும், இந்த நடைபயணம் 7 நாட்களுக்குள் கொழும்பை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

