
பாராளுமன்றத்திற்கு கறுப்பு ஆடை அணிந்து வந்த எதிர்க்கட்சியினர்
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர (வயது 38) படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று (23) எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு நேற்று (22) காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது படுகொலை தொடர்பான விசாரணையை 4 பொலிஸ் குழுக்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



