
”என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிதீர்ப்பேன்”
” என்னை கொலை செய்தால் பேயாக வந்தேனும் பழிவாங்குவேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் பொலிஸ் துறைக்கு பொறுப்பனா அமைச்சரே….” என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே சாமர சம்பத் தஸநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ”பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரே, எம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. முடிந்தால் எம்மை கொல்லுங்கள். ஆவியாக வந்தேனும் பழிதீர்ப்பேன். எனது பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. என்னை கொல்வதற்குதான் பார்க்கின்றீர்கள். கொலை செய்தாலும் உங்களுக்கு பின்னால்தான் நிற்பேன்.” என தெரிவித்துள்ளார்.

