
குஜராத் – சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் சென்னை அணி இன்று தனது கடைசி லீக்கில் மோதுகிறது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.
நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு ‘பிளே-ஆப்’ இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில் அகமதாபாத்தில் இன்று (21) அரங்கேறும் 66-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன. இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அகீல் ஹூசைன், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), நிஷாந்த் சிந்து, ஜோஸ் பட்லர். ராகுல் திவேதியா, ஜாசன் ஹோல்டர். வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், முகமது சிராஜ், ககிசோ ரபடா, அர்ஷத் கான், சாய் கிஷோர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

