வனவாஸல தண்டவாள ஆணிகள் நபர் ஒருவரால் கழற்றப்பட்டதால் ஏற்பட்ட புகையிரத விபத்தினால் 17 இலட்சம் ரூபா நஷ்டம்

வனவாஸல தண்டவாள ஆணிகள் நபர் ஒருவரால் கழற்றப்பட்டதால் ஏற்பட்ட புகையிரத விபத்தினால் 17 இலட்சம் ரூபா நஷ்டம்

வனவாஸல புகையிரத விபத்து காரணமாக புகையிரத தண்டவாளக் கட்டமைப்புக்கு மாத்திரம் சுமார் 17 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் சுமார் 200 அடி நீளமான புகையிரத தண்டவாளங்கள், குறுக்குக் கட்டைகள் மற்றும் தண்டவாளப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அதன் வீதி மற்றும் தொழில்துறை உப திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சேதமடைந்த அந்தப் பகுதிகள் ஏற்கனவே புனரமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புகையிரத சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் புகையிரதப் பெட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தற்சமயம் மதிப்பிடப்பட்டு வருவதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )