
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்
தெற்கு லெபனான் பகுதியில் உள்ள டயர் மாவட்டத்தின் Tora மற்றும் Jennata நகரங்களை இணைக்கும் வீதியை குறிவைத்து இஸ்ரேல் பல்வேறு ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக லெபனானின் தேசிய செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதனுடன், மர்ஜயூன் மாவட்டத்தில் அமைந்துள்ள Qabrikha நகரின் மீதும் இஸ்ரேல் இராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளோ காயங்களோ எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

