
நாளை விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் முன் ஆஜராக உத்தரவு
பாராளுமன்ற மைதானத்திற்கு அருகிலுள்ள போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகே நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, முன்னாள் தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாளை தலங்கம பொலிஸ் முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவலின்படி, இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, தலங்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி, வீரவன்சவை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் 18ஆம்திகதி , வீரவன்ச ஒரு குழுவினருடன் நினைவிடத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குள் நுழைந்து, அப்போது பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது பலத்தைப் பிரயோகித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் பொலிஸ், அறிவுறுத்தப்பட்டபடி அதிகாரிகளின் முன் ஆஜராகத் தவறினால், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீரவன்சவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

