சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!

சீனா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்புக்குப் பின்னர் இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இதுவே முதல் முறை என குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன ஜனாதிபதி, “நீண்ட அர்த்தமுள்ள தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

“இந்த அழைப்பும், சீனாவுக்கான உக்ரைனின் தூதர் நியமனமும், இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு பலமாக அமையும் என தான் நம்புவதாக” உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதலில் சீனா நடுநிலை வகித்து வருகின்றது. சீனா பல சந்தர்ப்பங்களில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது எனினும் ரஷ்யாவின் படையெடுப்பைக் சீனா கண்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share on

சீனா

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு...

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More

peoplenews lka

பீஜிங் வைத்தியசாலையில் தீ விபத்து!...

சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

பொருளாதாரத்தில் தொடர்ந்தும் வளர்ச்சி காணும் சீனா!...

முதல் காலாண்டில் முழு வளர்ச்சி... Read More