வடக்கு காசாவில் முன்னேறும் இஸ்ரேலியப் படை பலஸ்தீனரை தெற்கை நோக்கி செல்ல உத்தரவு !

வடக்கு காசாவில் முன்னேறும் இஸ்ரேலியப் படை பலஸ்தீனரை தெற்கை நோக்கி செல்ல உத்தரவு !

வடக்கு காசாவின் காசா நகர சுற்றுப்புறத்திற்குள் நுழைந்த இஸ்ரேலியப்படை அங்குள்ள பலஸ்தீனர்களை தெற்கை நோக்கிச் செல்ல உத்தரவிட்டபபோதும், தெற்கின் ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதோடு சரிமாரி வான் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.

காசா நகரில் ஷஜையா சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியை
நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறிய நிலையில் அங்கு கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

அங்கு ஆளில்லா விமானத் தாக்குதல்களும் இடம்பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு போர் வெடித்த ஆரம்பத்தில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்கள் நடத்திய நிலையிலேயே படையினர் மீண்டும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு ஷெஜையாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன சிவில் அவசரசேவை பிரிவுகுறிப்பிட்டுள்ளது.

இடிபாடுகளில் பலரும் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பாளர்களுக்கு அங்கு செல்ல முடியாதிருப்பதாக குறித்த சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் படை முன்னேறி வந்ததை அடுத்து பெண்கள், ஆண்கள்
மற்றும் சிறுவர்கள் பைகள் மற்றும் உணவை சுமந்து கொண்டு வீதியில் ஒடும் காட்சியை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளிட்டுள்ளது.

வடக்குப் பகுதியில் இஸ்ரேலிய டாங்கி ஒன்றை இலக்கு வைத்து
முன்கூட்டி வைக்கப்பட்ட வெடிப்பொருளை வெடிக்கச் செய்ததாக இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு தெரிவித்துள்ளது.

போராளிகள் பலர் பொதுமக்கள் இடையே ஒளிந்திருப்பதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் இராணுவம் மோதல் நடைபெறும் பகுதிகளில்
இருந்து மக்களை வெளியேறும்படி எச்சரித்துள்ளது.

‘உங்களின் பாதுகாப்புக்காக தெற்கில் சலா அல் தீன் வீதியில்
உள்ள மனிதாபிமான வலயத்தை நோக்கிச் செல்லுங்கள்’ என்று இஸ்ரே
லிய இராணுவப் பேச்சாளர் அவிசாய் அட்ராயி எக்ஸ் சமூகதளத்தின் ஊடக அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழன் நள்ளிரவு மத்திய காசாவின் அல் நுஸைரத் முகாமில் உள்ள பலஸ்தீன சிவில் பாதுகாப்பு சேவை தலைமையகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கு காசா போரில் இதுவரை
37,700க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அங்கு முழு அளவிலான பஞ்சம் ஒன்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

சுமார்அரை மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )