ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் தெரிவு!

ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் தெரிவு!

ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் .

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த மாதம் 19ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து ஈரானின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தல் முடிவில் முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் 42.5 சதவீத வாக்குகளும் சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர்.

ஆனால், ஈரான் நாட்டு சட்டத்தின்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதனால் மசூத் பெசெஸ்கியன் மற்றும் சயீது ஜலீலி இருவருக்கும் இடையிலான இரண்டாம் சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது.

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் மசூத் பெசெஸ்கியன் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )