பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிரத்தியேக வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்துள்ளதாக வடமத்திய தலைமை அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த சுற்றறிக்கையில், “வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் சில அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்து தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை பாடசாலை நேரத்தில் , பாடசாலை நேரம் முடிந்ததும் அல்லது வார இறுதி நாட்களில் நடத்துவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் வந்துள்ளன .

சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலையில் கற்பித்தல் பணியை முறையாக செய்யாததுடன், தங்களின் தனிப்பட்ட வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்லாத மாணவர்களை அலட்சியப்படுத்துவதுடன், பல்வேறு துன்பங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிப்பதும், பாடசாலை நேரத்திலோ, பாடசாலை நேரத்திற்குப் பின்னரோ அல்லது வார இறுதி நாட்களிலோ தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )