
திருகோணமலை கடற்கரையில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
திருகோணமலை கடற்கரையில் கடந்த 30ஆம் திகதி நீராடுவதற்கு சென்று காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
நண்பர்கள் நால்வர் திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்றிருந்த போது அதில் ஒருவர் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில். அவரை காப்பாற்ற முடியாது போனது.
இதனை தொடர்ந்து காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த நிலையில் இன்று காலை குறித்த இளைஞனின் சடலம் கடலில் அடையாளம் காணப்பட்டு கரைக்கு எடுத்துவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர் திருகோணமலை சீனக்குடா பகுதியினை சேர்ந்த 20வயது இளைஞர் என போலீசாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

