மனுவை வைத்தே தேசபந்து தென்னகோனை கண்டு பிடிக்கலாம்

மனுவை வைத்தே தேசபந்து தென்னகோனை கண்டு பிடிக்கலாம்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நிஜாம் காரியப்பர், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (11) உரையாற்றிய காரியப்பர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யும்போது தென்னகோன் சமாதான நீதிபதி முன் கையொப்பமிட்டு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டியிருப்பதால், இந்த மனுவின் மூலம் அவர் இருக்கும் இடத்தை தீர்மானிக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் “தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்யும்போது உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். சமாதான நீதிபதி முன் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட வேண்டும்.

அவர் சமாதான நீதிபதி முன் மனுவில் கையொப்பமிட வேண்டும். அந்த ஆவணம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. சமாதான நீதிபதியைக் கண்டு பிடித்தால், தப்பிச் சென்ற ஐஜிபியைக் கண்டுபிடிக்க முடியும்.

சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த வழியில் சிந்திக்க வேண்டும் என்று கூறிய எம்.பி நிஜாம் காரியப்பர், “எங்கள் சிஐடிக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை..” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)