தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இதொகாவின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” உள்ளூராட்சி மன்ற தேர்தலில்(2025) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான தேர்வுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தீர்மானம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர்களால் இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயார்படுத்தப்படும்.

ஆகவே எந்த ஒரு நபரும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாமென கட்சியின் உயர்பீடம் கேட்டுக்கொண்டுள்ள அதே வேலையில், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி பெயர்பட்டியல் வெளியிடப்படும்.” என மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)