
கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம் என்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (20) நண்பகல் 12 மணியுடன் முடிவடையவுள்ளது.
அத்துடன், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும்,நேற்று முன்தினம் (17) நிலைவரப்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வைப்புத்தொகை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளல் கடந்த 3ஆம் திகதி முதல் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.