
தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா ?
தோட்ட மக்களை லயன் அறையிலிருந்து விடுவித்து, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவர்களை வலுவூட்டுவோம் என ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக கூறி வந்தது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் ,”வேலையற்ற இளைஞர்கள் மற்றும் லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு பயிரிடப்படாத காணிகளை வழங்கி, சொந்தக் காலில் நிற்கத்தேவையான திட்டங்களை நாம் வகுத்திருந்தோம்.
தற்போதைய ஆளுந்தரப்பினர் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? தேர்தல் காலங்களில் வெறும் ஏமாற்று கோஷங்களையே மலையக மக்களுக்காக எழுப்பினர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.