
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஐஸ் போதைப்பொருளை கடத்தி அதன் மூலம் சம்பாதித்த பணத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 800 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் 4,96,000 ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரத்மலானை மெலிபன் சந்தியில் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பிலியந்தலை பள்ளிய வீதி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் ஐஸ் போதைப்பொருளும் பணமும் கண்டுபிடிக்கப்பட்டதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka