
பஸ் – கெப் வாகன விபத்தில் சாரதி உயிரிழப்பு20 பேர் காயம்
கந்தளாய் – திருகோணமலை வீதியில்
இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 காயமடைந்துள்ளனர்
அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தளாய் – திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கெப் வாகனத்தின் மீது, அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்று பின்னால் மோதியதியதுடன் ,எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றின் மீதும் குறித்த பஸ் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பஸ் சாரதி மற்றும் சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பஸ் சாரதி உயிரிழந்துள்ளளார்
விபத்தில் உயிரிழந்தவர் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்து குறித்து அக்போபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

