அமெரிக்கா நாணயத்தாள்களில் இனி ட்ரம்பின் கையொப்பம்                                              165 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறையில் மாற்றம்

அமெரிக்கா நாணயத்தாள்களில் இனி ட்ரம்பின் கையொப்பம் 165 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறையில் மாற்றம்

அமெரிக்க வெள்ளை மாளிகை ‘The White House’ என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை (App) வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தொடர்பான அனைத்து உடனுக்குடனான தகவல்களையும் இந்தச் செயலியின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க நாணயத்தாளொன்றில் கையொப்பமிடும் முதல் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் திகழ்வார் என அந்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் கூற்றை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வெளியிடப்படும் புதிய நாணயத்தாள்களில் ஜனாதிபதியின் கையொப்பத்தைக் காண முடியும்.

1861 ஆம் ஆண்டு முதல் கடந்த 165 ஆண்டுகளாக அமெரிக்க நாணயத்தாள்களில் கையொப்பமிடும் அதிகாரம் திறைசேரி செயலாளருக்கே (Treasurer) வழங்கப்பட்டிருந்தது.

அந்த நீண்டகாலப் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, இனிவரும் காலங்களில் திறைசேரி செயலாளருக்குப் பதிலாக ஜனாதிபதியின் கையொப்பம் நாணயத்தாள்களில் சேர்க்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )