
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வாகன நெரிசல் ,அவதானமாக செயற்படுமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை !
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துளாதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக , அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம்.R A D கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்
இதனால் இப்பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுயமென அவர் தெரிவித்துள்ளார்
கெலனிகம மற்றும் தொடங்கொட சந்திகளுக்கு அருகில் இன்று காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் கடந்த 3 நாட்களில் 134 மில்லியன்
ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலையில் 3லட்சத்து 87ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

