மட்டக்களப்பில் திருமணமான ஒன்பது நாளில் விபத்தில் பலியான மணமகன்

மட்டக்களப்பில் திருமணமான ஒன்பது நாளில் விபத்தில் பலியான மணமகன்

திருமணமான ஒன்பது நாளில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சந்திவெளியைச் சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் சந்திவெளியில் நேற்று நடைபெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக உணவினை பெற்றுக்கொள்ள சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர் 9 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )