சென்னை- ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

சென்னை- ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது.

ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஆயுஷ் மாத்ரே, டிவான் கான்வே, உர்வில் பட்டேல், பிரேவிஸ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), நூர் அகமது, அன்ஜூல் கம்போஜ், கலீல் அகமது, பதிரானா.

ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, கிவெனா மபாகா, துஷர் தேஷ் பாண்டே, ஆகாஷ் மத்வால், பசல்ஹக் பரூக்கி.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )