உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk க்கு பிரவேசித்து, Our Services பகுதியின் கீழ் உள்ள “Exam Information Centre” என்பதை கிளிக் செய்து விண்ணபிக்கலாம்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மொபைல் செயலி (DOE) மூலம் “Exam Information Centre” என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

https://onlineexams.gov.lk/eic இணையதளத்தை அணுகுவதன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே மீள்பரிசீலனைக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள், விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் உதவி பெறலாம்:

இணைய வழி கிளை : 0113661122, 0113671568

பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டு கிளை: 0112785231, 0112785681

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )