துப்பாக்கிதாரி கண்டுபிடிக்க உதவி கோரிய பொலிஸார்

துப்பாக்கிதாரி கண்டுபிடிக்க உதவி கோரிய பொலிஸார்

கொட்டாஞ்சேனையில் உள்ள சுமித்ராராம மாவத்தையில் கடந்த 16ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேடப்படும் துப்பாக்கிதாரியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே ஆண் மற்றும் பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறி ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், துப்பாக்கிதாரியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேக நபர் 30 முதல் 35 வயதுடையவராகவும், 05 அடி 09 அங்குல உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591571, 071- 8596386, அல்லது 074 – 0253623 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )