குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு

இந்தியாவில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது

4 நாட்களுக்கு முன்னர் இரவில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து நேற்றும் (30) குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மெயின் அருவியில் பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.

பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க 5வது நாளாக தடையை தென்காசி மாவட்ட நிர்வாக நீட்டித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )