
மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ வெலிக்கடை சிறைச்சாலையில் அடைப்பு
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் நேற்று (29) கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2015 ஜனாதிபதித் தேர்தலின்போது சதோச மூலம் இறக்குமதி செய்யப்பட்ட கேரம் போர்டுகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை சட்டவிரோதமாக விநியோகித்ததாகவும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53.1 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

