பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; ஒருவர் கைது

பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; ஒருவர் கைது

கடந்த 29 ஆம் திகதி பாணந்துறை, வேகட பகுதியில் மோட்டார் சைக்கிள் பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவரை பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும், மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் சம்பவத்திற்கு முன் தினம் இரவு குறித்த சந்தேக நபரின் வீட்டில் தங்கியிருந்ததாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் குற்றத் தடுப்புப் பிரிவு ஆஜர்படுத்தவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )