
மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு
மதுரங்குளிய – சீமரகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளிய – சீமரகம பிரதேசத்தில் நேற்று (01) பிற்பகல் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளாதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சீமரகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவராவார்.
வீட்டில் மின் சாதனத்தை நிறுவ முயன்றபோது, சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

