மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மஹியங்கனை – மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (19) மதியம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி தாக்கியதன் விளைவாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )