12 இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

12 இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குறித்த 12 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களும் அவர்களது இரண்டு படகுகளும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டன.

பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )