
அனுதி குணசேகர நாடு திரும்பினார்
72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார்.
கடந்த மே 31 ஆம் திகதி இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகரவுக்கு முதல் 40 பேருக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை தாய்லந்தின் ஒபல் சுச்சாத்தா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

