
அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்நாட்டை வந்தடைந்தார்
அவுஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
ரிச்சர்ட் மார்லஸ் நேற்றிரவு 11:40ற்கு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சின் ASY-307 என்ற விசேட விமானத்தில் கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்
அவருடன் 15 பேர் கொண்ட குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய துணை பிரதமர் மற்றும் குழுவினரை விமான நிலையத்தின் விசேட விருந்தினர்களுக்கான ஓய்வறையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழு வரவேற்றனர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் அவரது தூதுக்குழு, தங்கள் உத்தியோகபூர்வ பணிகளை நிறைவுசெய்து கொண்டு,
இன்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட உள்ளனர்.

