
மருதமுனை கடற்கரையில் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை
புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று சிறப்பாக நடைபெற்றன.
அதற்கமைய புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரையில் இன்று நடைபெற்றது.
மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில் மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பிரதிப்பணிப்பாளர் நுவீஸ் மக்கி தொழுகையினை நடத்தி வைத்ததுடன் குத்பா பிரசாரத்தினையும் நிகழ்த்தினார்.



