
கால்நடை மருத்துவர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது .
நாளை (09) காலை 6 மணி முதல் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் உப்புல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை நாசப்படுத்த விவசாய அமைச்சின் செயலாளர் தொடர்ந்து முயற்சிப்பதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

