ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் நாடு திரும்பினால் பொது மன்னிப்பு வழங்கப்படும்

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் நாடு திரும்பினால் பொது மன்னிப்பு வழங்கப்படும்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அங்குள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் அமெரிக்க அரசு, ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர்.

அங்கு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்.

அவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் மீண்டும் அமெரிக்காவை விட்டு ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அங்கு சென்றால் தலிபான்கள் தங்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பயண தடை உத்தரவை நீக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் நாடு திரும்பலாம் எனவும், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவிப்பை தலிபான் அரசின் பிரதமர் முகமது ஹாசன் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )