
எலான் மஸ்க்கை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், வரிக்குறைப்பு மசோதாவுக்கு வாக்களிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
என்.பி.சி நியூஸ் பேட்டியில் டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டார்.
மேலும் அவர், ” பிக் பியூட்டிபுல் பில்” என்ற வரிக்குறைப்பு மசோதா குறித்த மஸ்கின் கடுமையான விமர்சனமே இந்த மோதலுக்குக் காரணம்.
கடந்த ஆண்டு குடியரசுக் கட்சியின் பெரிய நிதி ஆதரவாளர்களில் ஒருவரான மஸ்க் விளங்கினார். இந்நிலையில் இப்போது மசோதாவை எதிர்த்த சில சட்டமியற்றுபவர்கள், மசோதாவுக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு எதிராக நிதி திரட்டும்படி மஸ்க்கிடம் கோரியிருந்தனர்.
இந்த சூழலில்தான், “அவர் அப்படிச் செய்தால் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” , மஸ்க் “மரியாதையற்றவர்” எங்கள் உறவு முடிந்துவிட்டது. என தெரிவித்துள்ளார்.

