கம்பஹாவில் இன்று 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹாவில் இன்று 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று (11) 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பை பிரதான அமைப்புடன் இணைப்பதன் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பேலியகடை, வத்தளை, ஜா-எல, சீதுவ நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவங்கொட பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதியின் ஒரு பகுதியிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )