செவ்வந்திக்கு பணம் அனுப்பிய நபர் கைது

செவ்வந்திக்கு பணம் அனுப்பிய நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று (16) ஆஜர்படுத்திய போது
கொலை நடந்த நேரத்தில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டதாகவும், பணம் சந்தேகநபரின் கணக்கில் இணையவழி ஊடாக வைப்பிலிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )