சூர்யா 45 படத்தின் டைட்டில் அறிவிப்பு

சூர்யா 45 படத்தின் டைட்டில் அறிவிப்பு

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.சூர்யாவின் 45- வது திரைப்படமான இப்படத்திற்கு கருப்பு என்ற பெயர் வைத்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.

படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார்.

படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )