கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி  நியமனம்

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி நியமனம்

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த படபெந்தி மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப மஞ்சுள திலகரத்ன தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற எண் 6 நீதிபதியாக பணியாற்றிய நவரத்னே மரசிங்க, சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சஹான் மாபா பண்டார, திருமதி லங்கா ஜயரத்னே மற்றும் திருமதி இந்திக்கா கலிங்கவங்ச ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள நீதிபதி பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சஹான் மாபா பண்டார மற்றும் இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய திருமதி லங்கா ஜயரத்ன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய மஹேன் வீரமன், இரண்டாம் எண் நீதிமன்ற நீதிபதியாகவும், ஆர்.எஸ்.எஸ்.சபுவிட நீதிமன்ற எண் மூன்று நீதிபதியாகவும், சுஜீவ நிஸ்ஸங்க நீதிமன்ற எண் நான்கு நீதிபதியாகவும், எச்.பி.எம்.அபயரத்னே நீதிமன்ற எண் ஐந்து நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )