159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு

159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. 

இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள் வருமாறு: 

A-004: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதி 

A-026: கண்டி – மகியங்கனை – பதியதலாவ வீதி 

AA 006: அம்பேபுஸ்ஸ – குருநாகல் – திருகோணமலை வீதி 

AA 010: கட்டுகஸ்தோட்டை – குருநாகல் – புத்தளம் வீதி 

AA 003: பேலியகொட – புத்தளம் வீதி உள்ளிட்ட பல பிரதான வீதிகள் இதில் அடங்குகின்றன. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )