சிரியாவில் தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் பலி

சிரியாவில் தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் பலி

சிரியாவின், டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும்
63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை குறித்த தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிரேக்க ஒர்த்தடொக்ஸ் தேவாலயத்துக்குள் சென்ற ஒருவர், அங்கு இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியாவின்
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த தாக்குதலுக்கும் ISIS அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என சிரியா சந்தேகம் வெளியிட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )