தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ; வாக்குமூலமளிக்கவுள்ள 15 சாட்சியங்கள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ; வாக்குமூலமளிக்கவுள்ள 15 சாட்சியங்கள்

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு இன்று (23) காலை மீண்டும் கூடியது.

தேசபந்து தென்னகோன் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சாட்சிகளை சாட்சியமளிக்க குழு அழைத்துள்ளது.

திங்கள் முதல் புதன்கிழமை வரை அடுத்த மூன்று நாட்களில், குழு 15 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்து, விசாரணைக்குழு தனது நடவடிக்கைகளைத் தொடர ஜூன் 26 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )