
200 உள்ளூராட்சி நிறுவனங்களில் திசைகாட்டி அதிகாரத்தைக் கைப்பற்றியது
தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
நேரடியாகக் கைப்பற்றப்பட்ட 151 மன்றங்கள் உட்பட 200 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது .
இதேவேளை ,இன்று கைப்பற்றப்பட்ட கம்பளை நகர சபை மற்றும் பெந்தோட்டை பிரதேச சபையுடன், ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றிய உள்ளூராட்சி மன்றங்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆகும்.
இலங்கை தமிழ் அரசு கட்சி 17 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
பொதுஜனபெறமுன இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தலா 3 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.
இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியால் எந்த நிறுவனத்திலும் ஆட்சியைப் பெற முடியவில்லை.
சுயேச்சைக் குழுக்கள் மற்றும் பல சிறிய கட்சிகள் 12 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

