வெளிநாட்டு ஆசைகாட்டி 150 பேரிடமிருந்து 5 கோடி ரூபா மோசடி !

வெளிநாட்டு ஆசைகாட்டி 150 பேரிடமிருந்து 5 கோடி ரூபா மோசடி !

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 150 பேரிடமிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் , கிருலப்பனை பொலிஸ் பிரிவில் பண மோசடி தொடர்பாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பின்னர், கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று விசாரணை நடத்தி, இந்த சந்தேகநபரைக் கைது செய்தது.

தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )